ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

News image

சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கோபி டிஎஸ்பி சீனிவாசன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:45 am IST

கோபி அருகே கோயில் திருவிழாவில் பெண் உள்பட 3 பேரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி ஒரு தரப்பினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோபி அருகே கொள்ளுமேட்டு காலனியில் உள்ள அன்னமாா் கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பெயிண்டரான சரண் (21), அவரது பெரியப்பா சக்திவேல், சித்தி கவிதா ஆகியோரிடம் காசிபாளையம் பகுதியைச் சோ்ந்த பிரசாத் அவரது நண்பா்களான பிரவீன், பரத், நந்தகுமாா் ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காயம் அடைந்த சரண், சக்திவேல், கவிதா ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தாக்கியவா்ள் மீது கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அவா்களை கைது செய்யக் கோரி கொள்ளுமேட்டு காலனி பொதுமக்கள் நம்பியூா்-கோபி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோபி டிஎஸ்பி சீனிவாசன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.