மிக முக்கிய துறையில் 1,300 காலிப்பணியிடங்கள்: குவியும் வழக்குகள்

நாட்டின் மிக முக்கிய புலனாய்வு அமைப்பான சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை, ஊழியர்களின் பற்றாக்குறையால் திணறி வருகிறது. 
மிக முக்கிய துறையில் 1,300 காலிப்பணியிடங்கள்: குவியும் வழக்குகள்
மிக முக்கிய துறையில் 1,300 காலிப்பணியிடங்கள்: குவியும் வழக்குகள்


புது தில்லி: நாட்டின் மிக முக்கிய புலனாய்வு அமைப்பான சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை, ஊழியர்களின் பற்றாக்குறையால் திணறி வருகிறது. 

காலியிடங்களை நிரப்பக் கோரி வைக்கப்படும் பரிந்துரைகள் இன்னமும் கிடப்பில் இருப்பதால், நிலுவையிலிருக்கும் வழக்குகளின் சுமை அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, சிபிஐயில் 5,899 பேர் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, சிபிஐயில் பணியாற்ற வேண்டிய மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 7,272 ஆகும். இந்த கணக்கின்படி, சிபிஐ அதிகாரிகள் முதல் உணவக ஊழியர் வரையிலான 1,374 பணியிடங்கள் காலியாக விடப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு நாளும் சிபிஐ வசம் செல்லும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேச் செல்லும் நிலையில், அந்த வழக்குகளை விசாரிக்க, குழுக்களை அமைக்கும் பணி, காலிப் பணியிடங்களால் தேக்கமடைகின்றன.

சிபிஐ வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், சுமார் 1,256க்கும் மேற்பட்ட வழக்குகள், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பதிவு செய்யப்பட்ட 64 வழக்குகள் சிபிஐ வசம் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக, மத்திய புலனாய்வுத் துறையில், அனுமதிக்கப்பட்டிருக்கும் 5,000 செயல் அதிகாரிகளின் பணியிடங்களில், 829 பதவியிடங்கள் காலியாகவே உள்ளன.  தற்போது 4,171 செயல் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.

இது மட்டுமல்லாமல், தொழில்நுட்ப அதிகாரிகள் மட்டத்திலும், அனுமதிக்கப்பட்ட 162 அதிகாரிகளுக்கு பதிலாக 66 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். 96 காலிப் பணியிடங்கள் உள்ளன.

ஊழல் தடுப்பு, பொருளாதாரக் குற்றங்கள், நிர்வாகம், கொள்கை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இதுபோன்ற காலிப்பணியிடங்களால், உடனுக்குடன் விசாரித்து முடிக்க வேண்டிய பல முக்கிய வழக்குகள் நிலுவைப் பட்டியலுக்குத் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com