மும்பை - கோவா கப்பல் பணியாளர் ஒருவருக்கு கரோனா: பரிசோதனை முடிவுக்காக பயணிகள் காத்திருப்பு

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட பயணியர் கப்பலில் 2,000 க்கும் மேற்பட்டவர்களுடன் பயணம் செய்த கப்பல் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மும்பை - கோவா கப்பல் பணியாளர் ஒருவருக்கு கரோனா: பரிசோதனை முடிவுக்காக பயணிகள் காத்திருப்பு


மும்பை:  மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட பயணியர் கப்பலில் 2,000 க்கும் மேற்பட்டவர்களுடன் பயணம் செய்த கப்பல் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட கப்பலில் பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, கப்பலிலேயே பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 1471 பயணிகள் மற்றும் 595 பணியாளர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

பரிசோதனையின் முடிவுகளுக்காக அனைவரும் கப்பலிலேயே காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கப்பல் தற்போது மோர்முகாவ் துறைமுக கப்பல் முனையமான வாஸ்கோ அருகே நிறுத்தப்பட்டுள்ளது. 

யாரும் கப்பல் தளத்தில் ஏறவோ, இறங்கவோ அனுமதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com