ஆப்கனுக்கு மேலும் 5 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

மனிதாபிமான உதவியாக ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 5 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: மனிதாபிமான உதவியாக ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 5 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: "இன்று, மனிதாபிமான உதவியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கரோனா தடுப்பூசி மேலும் 5 லட்சம் டோஸ்களை இந்தியா வழங்கியுள்ளது. அது காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது."

மேலும் வரும் வாரங்களில் கூடுதலாக 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

மனிதாபிமான உதவியாக ஜனவவரி 1 ஆம் தேதி 5 லட்சம் டோஸ் கோவாக்சின் கரோனா தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.

உணவு தானியங்கள், பத்து லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் அடங்கிய மனிதாபிமான உதவிகளை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வழங்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பு மூலம் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு 1.6 டன் மருத்துவ உதவிகளை வழங்கியது.

ஆகஸ்ட் 15 அன்று காபூலை தலிபான்கள் கைப்பற்றினர், இதைத் தொடர்ந்து நாடு மோசமான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு உதவி நிறுத்தம், ஆப்கானிஸ்தான் அரசாங்க சொத்துக்கள் முடக்கம் மற்றும் தாலிபான் மீதான சர்வதேச தடைகள் ஆகியவற்றால் நாடு முழு அளவிலான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com