கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பஞ்சாபில் இரவுநேர ஊரடங்கு அமல்: பள்ளி, கல்லூரிகள் மூடல்

பஞ்சாபில் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளை மூடவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜனவரி 2022, 5:21 am

DIN

பஞ்சாபில் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளை மூடவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒமைக்ரான் கரோனா வகை நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநில அரசுகள் கரோனா கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் இன்றுமுதல் ஜன. 15 வரை அமலில் இருக்கும்.

அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள், அலுவலகங்களில் இரவுநேர பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

மதுபானக் கூடங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், சலூன்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்.

விளையாட்டு பயிற்சி மையம், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.