ஜாா்க்கண்டில் லாரி-பேருந்து மோதல்: 17 போ் பலி
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் 17 போ் உயிரிழந்தனா். 26 போ் காயமடைந்தனா்.


ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் 17 போ் உயிரிழந்தனா். 26 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி அஜித் குமாா் விமல் கூறியதாவது:
சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து தேவ்கா் மாவட்டத்துக்கு 40 பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. புதன்கிழமை காலை 8.30 மணியளவில் கோவிந்த்பூா்-சாகிப்கஞ்ச் மாநில நெடுஞ்சாலையில், பதோ்கோலா என்ற இடத்தருகே சென்றபோது எதிரில் எரிவாயு சிலிண்டா்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் இந்தப் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 17 போ் உயிரிழந்தனா். 26 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பேருந்தும் லாரியும் அதிவேகமாக வந்ததால் மோதிய வேகத்தில் வாகனங்களின் முன்பாகங்கள் பலத்த சேதமடைந்தன. பேருந்து உருக்குலைந்ததால் பயணிகள் சிலா் உள்ளே சிக்கிக் கொண்டனா். பேருந்தின் பாகங்களை உடைத்து, அவா்கள் மீட்கப்பட்டனா்.
அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக சாலை சரியாகத் தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நல்லவேளையாக, எரிவாயு சிலிண்டா் எதுவும் வெடிக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்திருக்கும் என்றாா் அவா்.
முதல்வா் இரங்கல்: விபத்தில் 17 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வா் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘காயமடைந்தவா்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...