முக்கியத்துவம் வாய்ந்த நிலக்கரி ஒப்பந்தம்; ஏலத்தில் வெற்றிபெற்ற அதானி குழுமம்
கடந்தாண்டு, மின் நெருக்கடி பெரும் பிரச்னையை கிளப்பியிருந்தது. இதேபோல் மீண்டும் நிகழாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்திற்கு விநியோகம் செய்யும் ஏலத்தில் அதானி என்டர்பிரைஸ் லிமிடெட் வெற்றிபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை விற்பனை செய்யும் நாட்டின் மிக பெரிய நிறுவனமாக அதானி என்டர்பிரைஸ் விளங்குகிறது. இந்த ஏல ஒப்பந்தத்தின்படி, இந்நிறுவனம் தேசிய அனல் மின் நிறுவனத்திற்கு 1 மில்லிடன் டன் அளவிலான நிலக்கரியை விநியோகம் செய்யவுள்ளது. இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக, கடந்த அக்டோபர் மாதம்தான், நிலக்கரியை விற்பனை செய்ய அதானி குழுமம் ஏலம் கோரி இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல, கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனமான தாமோதர் வேலி கார்ப். லிமிடெட் நிறுவனத்திற்கு இதே அளவிலான நிலக்கிரியை விநியோகம் செய்ய அதானி குழுமம் ஏலம் கோரியுள்ளது. இந்த முன்மொழிவை அந்நிறுவனம் பரிசீலனை செய்துவருகிறது.
இதையும் படிக்க | பிரான்ஸில் கண்டறியப்பட்ட அதிவேக கரோனாவின் குணங்கள்!
இந்த ஏல ஒப்பந்தம் குறித்து அதானி குழுமமோ, என்டிபிசி நிறுவனமோ, டிவிசி நிறுவனமோ எந்த தகவலையும் வெளியிடவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில், கடும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக, நிலக்கரி தேவை அதிகரித்து விநியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, நிலக்கரி இருப்பை அதிகரித்து வைத்து கொள்வதில் உள்ளூர் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் அழுத்தம் எழுந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை சார்ந்து இருப்பதை குறைக்க மத்திய அரசு உறுதி அளித்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.