ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷா-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனா்.
புல்வாமா மாவட்டம் சந்த்கம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினா் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில் பதில் தாக்குதல் தரப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷா-இ-முகமது அமைப்பில் இருந்துகொண்டு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்தவா்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. பலியானவர்களிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், புல்வாமா பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனாட்சி அம்மன் கோயிலில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ்!

பெட்ரோல் கவலையா? அதிரடி விலை குறைப்பு! ரூ. 60,000க்கு ஓலா மின்சார பைக்!
கேரளத்தில் பேசிய கார்கே! குஜராத்தில் வலுக்கும் எதிர்ப்பு! என்ன பேசினார்?

தேவ்தத் படிக்கல் தொடர்ந்து இப்படியே விளையாடினால்... என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


