புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

‘பிரதமரின் பொதுக் கூட்டங்களை நிறுத்த வேண்டும்’: தேர்தல் ஆணையருக்கு காங். கடிதம்

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பெரிய கூட்டங்களை நிறுத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஜனவரி 2022, 8:34 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பெரிய கூட்டங்களை நிறுத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பிரசாரத்தை அனைத்து கட்சியினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உ.பி. காங்கிரஸ் அனுப்பிய கடிதத்தில்,

“கரோனா மூன்றாம் அலையை தடுக்க பெரிய பேரணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆகியோரின் பெரிய பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அரசு இயந்திரம் மற்றும் பணத்தில் ஏற்பாடு செய்யும் திட்டங்களின் துவக்க நிகழ்ச்சி கூட்டங்களில் அரசியல் கருத்துகளை பேசுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.”

முன்னதாக உ.பி. முழுவதும் நடைபெறவிருந்த காங்கிரஸின் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களை ஒத்திவைப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.