கோவாக்‍சின் செலுத்திய குழந்தைகளுக்கு வலிநிவாரணி தேவையில்லை: பாரத் பயோடெக்

கோவாக்‍சின் செலுத்திய குழந்தைகளுக்கு வலிநிவாரணி தேவையில்லை: பாரத் பயோடெக்

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பின்னர், வலிநிவாரணி மாத்திரைகள் எதுவும் பயன்படுத்த தேவையில்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 


நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பின்னர், வலிநிவாரணி மாத்திரைகள் எதுவும் பயன்படுத்த தேவையில்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் கோவாகக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளை செலுத்தும்போது ஏற்படும் காய்ச்சல் ஏற்பட்டால் அதனை போக்குவதற்காக வலிநிவாரணி மாத்திரைகளும் வழங்கபட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள், பாராசிட்டமால் மாத்திரையையோ அல்லது வலி நிவாரணியையோ எடுத்துக்கொள்ள அவசியமில்லை என அறிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சில மையங்களில், குழந்தைகளுக்கு கோவாக்சின் செலுத்தியவுடன் மூன்று 500 மி.கி அளவுள்ள பாராசிட்டமால் மாத்திரைகளை பரிந்துரைக்ப்படுவதாக அறிந்தோம். கோவாக்சின் செலுத்திய பின்னர் பாராசிட்டமால் மாத்திரையோ அல்லது வலி நிவாரணிகளோ எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.  

15-18 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை இந்தியா தொடங்கியது.

அதன்படி, 30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கோவாக்சின் பரிசோதனையில், 10 முதல் 20 சதவிகிதம் பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டது. அந்த பக்க விளைவுகளில் பெரும்பாலானவை லேசானவை. அந்த பக்க விளைவுகள் ஒன்றிண்டு நாள்களில் சரியாகிவிட்டது. அந்த பக்க விளைவுகளை சரி செய்ய தனியாக எந்த மருந்தும் தேவைப்படவில்லை என்று பாரத் பயோடெக் நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்கு  பின்னரே காய்ச்சல் மற்றும் வலிகளுக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பிற கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு எதிராக 15-18 வயதுக்குள்பட்ட ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 1 கோடிக்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஜனவரி 3 ஆம் தேதி குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட மூன்றாவது நாளில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளதாகவும், "தடுப்பூசிக்கான விழிப்புணர்வு இளம் இந்தியர்களிடையே அபாரமாகவும் உற்சாகம்" உள்ளதாகவும், தகுதியுள்ள அனைத்து இளம் இளைஞர்களும்  விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com