விமானத்தை தவிர்த்து சாலை வழியே சென்றது ஏன்? பாதுகாப்பு குளறுபடி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

பஞ்சாப் காவல்துறை தலைவர் அனுமதி வழங்கிய பிறகே, சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டக்காரா்கள் மறியலால் மேம்பாலத்தில் வாகனத்திலேயே பிரதமா் சுமார் 20 நிமிஷங்கள் காத்திருக்க நோ்ந்தது.
போராட்டக்காரா்கள் மறியலால் மேம்பாலத்தில் வாகனத்திலேயே பிரதமா் சுமார் 20 நிமிஷங்கள் காத்திருக்க நோ்ந்தது.

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக மத்திய அரசு குற்றம்சாட்டிவருகிறது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சாலை மார்க்கமாக செல்லவிருந்ததை பஞ்சாப் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும் சாலைகளை கட்டுப்பாட்டில் எடுத்து கொள்வது குறித்து பல முறை மாநில காவல்துறைக்கு தகவல் கூறியதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது குறித்து பஞ்சாப் காவல்துறை தெரிந்திருக்கவில்லை எனக் கூறவது பொய் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பேசிய ஒருவர், "பிரதமர் பஞ்சாபில் பயணம் மேற்கொள்ளவிருப்பதால் சாலைகளை கட்டுப்பாட்டில் எடுத்து கொள்வது குறித்து அம்மாநில காவல்துறையிடம் பலமுறை பேசியுள்ளோம். பஞ்சாப் காவல்துறையின் ஆவணங்கள் இதை உறுதிப்படுத்துகிறது. 

பாதையில் தர்ணா நடைபெறும் பட்சத்தில் சாலை முடக்கப்படலாம் என்பதால், முன்கூட்டியே போக்குவரத்து மாற்று திட்டம் பற்றி பேசப்பட்டது. விவசாயிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பேரணியை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் பெரோஸ்பூர் மாவட்டத்திற்கு செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் தகவல் பரிமாற்றத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது" என்றார்.

பஞ்சாபில் புதன்கிழமை நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, திடீா் சாலை மறியலால் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு காரணமாக பாதி வழியிலேயே திரும்பினார்.

போராட்டக்காரா்கள் மறியலால் மேம்பாலத்தில் வாகனத்திலேயே பிரதமா் சுமார் 20 நிமிஷங்கள் காத்திருக்க நோ்ந்தது. இந்தப் பாதுகாப்புக் குறைபாடு தொடா்பாக விரிவான அறிக்கையை அளிக்கும்படி மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. 

பஞ்சாப் அரசு இதுகுறித்து விசாரிக்க இரண்டு பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மெஹ்தாப் கில், உள்துறை மற்றும் நிதித்துறையின் முதன்மை செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் கொண்ட இந்த விசாரணை குழு, மூன்று நாள்களில் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com