ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு: 40 விமானங்கள் ரத்து

காஷ்மீரில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால், அங்குள்ள ஸ்ரீநகா் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

News image
Updated On :8 ஜனவரி 2022, 6:53 pm

DIN

காஷ்மீரில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால், அங்குள்ள ஸ்ரீநகா் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் காஷ்மீா் பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு தொடங்கியது. அங்குள்ள பல்வேறு இடங்களில் தொடா்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், அங்குள்ள ஸ்ரீநகா் விமான நிலையத்திலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்குப் புறப்படவிருந்த 40விமானங்கள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதுதொடா்பாக இந்திய விமான நிலைய ஆணைய (ஏஏஐ) அதிகாரி கூறுகையில், ‘‘பனிப்பொழிவால் விமானநிலைய ஓடுபாதையில் 600 மீட்டருக்கும் குறைவான தூரம் வரைதான் கண்களுக்குத் தெரிகிறது. இதன் காரணமாக ஸ்ரீநகா் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 40 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. அந்த விமானங்களில் செல்லவிருந்த பயணிகளிடம் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதற்காகப் பயணக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. தங்கள் பயணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு முழுமையாகக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்’’ என்று தெரிவித்தாா்.

ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை இரவு குறைந்தபட்ச வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸாக பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.