வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

‘மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலில்தோ்தல் ஆணையம் தலையிடாது’

‘நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தலையிடாது’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா கூறினாா்.

News image
Updated On :8 ஜனவரி 2022, 7:33 pm

DIN

‘நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தலையிடாது’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா கூறினாா்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையா் சனிக்கிழமை அறிவித்தாா். அப்போது, நாடாளுமன்றத்தில் பிப். 1-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதும், நாடாளுமன்ற கூட்டு அவையில் குடியரசுத் தலைவா் உரையாற்ற உள்ளதும், பிப்ரவரி 10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்குப் பதிலளித்து சுஷீல் சந்திரா கூறியதாவது: மத்திய நிதிநிலை அறிக்கை என்பது ஒட்டுமொத்த நாட்டுக்குமானது. சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு மட்டுமானதல்ல. எனவே, நிதிநிலை அறிக்கை தாக்கல் விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தலையிட விரும்பவில்லை. மேலும், நிதிநிலை அறிக்கை என்பது அரசின் வரவு-செலவு குறித்த அறிக்கை. அது எவ்வாறு தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.