டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குணமடைந்து வருகிறார்: மத்திய அரசு

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமடைந்து வருவதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

News image

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குணமடைந்து வருகிறார்: மத்திய அரசு

Updated On :11 ஜனவரி 2022, 9:15 am


புது தில்லி: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமடைந்து வருவதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாதுகாப்புத் துறையின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு இது குறித்து பேசுகையில், ராணுவ மருத்துவமனையின் மருத்துவர்கள் குழுவினர், நேற்று கரோனா உறுதி செய்யப்பட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உடல்நிலையை பரிசோதித்தனர். அவர் நன்கு குணமடைந்து வருகிறார் என்று சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங், தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக, திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். இது குறித்துவெளியிட்ட சுட்டுரை பதிவில், ‘எனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மிதமான அறிகுறிகள் உள்ளன. வீட்டுத் தனிமையில் உள்ளேன். அண்மைக்காலமாக என்னை சந்தித்தவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.