சுவாமி பிரசாத் மௌர்யா (கோப்புப்படம்)
சுவாமி பிரசாத் மௌர்யா (கோப்புப்படம்)

என் தந்தை எந்தக் கட்சியிலும் இணையவில்லை: சுவாமி பிரசாத் மௌர்யா மகள்

உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த சுவாமி பிரசாத் மௌர்யா, இதுவரை எந்தக் கட்சியிலும் இணையவில்லை என அவரது மகள் சங்கமித்ரா மௌர்யா தெரிவித்துள்ளார்.
Published on


உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த சுவாமி பிரசாத் மௌர்யா, இதுவரை எந்தக் கட்சியிலும் இணையவில்லை என அவரது மகள் சங்கமித்ரா மௌர்யா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சங்கமித்ரா கூறியது:

"எனது தந்தை உறுதியாக ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், சமாஜவாதி கட்சியிலோ அல்லது வேறு எந்தக் கட்சியிலோ இன்னும் இணையவில்லை.

2016-இல் எனது தந்தை பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து வெளியேறியபோதும், எனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிவபால் யாதவ் வெளியிட்டார். அதுவும் சமூக ஊடகங்களில் வைரலானது. அடுத்த இரண்டு நாள்களில் வியூகம் குறித்து முடிவெடுப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்."

சுவாமி பிரசாத் மௌர்யா அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தவுடன், அவரை வரவேற்பதாக சமாஜவாதி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. சமூக நீதிப் புரட்சி நடைபெறும் என்றும் 2022-இல் மாற்றம் நிகழும் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com