உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தல்: மாயாவதி முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி

நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போட்டியிடப்போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சி.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி போட்டியிடப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சி.மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாயாவதியும், நானும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அதேசமயம் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மொத்தம் உள்ள 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேச அரசியல் போட்டியிலிருந்து மாயாவதி விலக்கப்பட்டுள்ளதால்தான் அவர் போட்டியிடுவதை தவிர்த்துள்ளார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com