தமிழ்நாட்டில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இதுபற்றி கூறுகையில், "தற்போதைய சூழலில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவையில்லை. பொருளாதாரம் பாதிப்படைந்துவிடக் கூடாது என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கே போதுமானது" என்றார்.
இதையும் படிக்க | 73 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசிக்குத் தகுதி: சென்னை மாநகராட்சி
தமிழ்நாட்டில் ஏற்கெனவே இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள இரவுநேர ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






