
புது தில்லி: பொங்கல் தமிழ்நாட்டின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொங்கல் தமிழ்நாட்டின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக திகழ்கிறது.
இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு என வாழ்த்துகள்.
இதையும் படிக்க | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது
இயற்கையுடனான நமது பிணைப்பும், நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் செழுமையையும் அதிகரிக்க பிரார்த்திக்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.