சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

பள்ளிகளில் தற்காலிக தடுப்பூசி மையங்கள்: தில்லிஅரசு உத்தரவு

சுகாதார கிளினிக்குகள் செயல்பாட்டில் உள்ள தில்லி அரசின் 20 பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பதின்ம வயது குழந்தைகளுக்கு

News image
Updated On :14 ஜனவரி 2022, 2:23 am

 நமது நிருபர்

சுகாதார கிளினிக்குகள் செயல்பாட்டில் உள்ள தில்லி அரசின் 20 பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பதின்ம வயது குழந்தைகளுக்கு தற்காலிக தடுப்பூசி மையங்களை திறக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் கல்வி இயக்ககம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: சுகாதார கிளினிக்குகள் செயல்படும் 20 அரசுப் பள்ளிகளில் 15 முதல் 18 வயது வரையிலான பிரிவு குழந்தைகளுக்கான தடுப்பூசி மையங்களை திறக்க அனைத்து மாவட்ட, மண்டல கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது. இந்தத் தடுப்பூசி மையங்களை அமைக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியருடன் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தத் தடுப்பூசி மையம் அமைக்க பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தனியாக போதிய இடம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தங்கள் அதிகார எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று தினசரி அடிப்படையில் தடுப்பூசி நடைமுறைகளை பரிசோதிக்க அனைத்து மாவட்ட, மண்டல கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கான தேதி குறித்து மாணவா்களுக்கு தெரிவிக்கப்பட்ட விவரங்களை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிா என்பதையும் அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

அதே போன்று, தடுப்பூசி தொடா்பாக பெற்றோா்களுக்கும் மாணவா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் ஒவ்வொரு பள்ளியிலும் தடுப்பூசி செலுத்தப்படும் மாணவா்களுடைய எண்ணிக்கையை 80 சதவீதத்திற்கும் மேலாக இருப்பதை உறுதிப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.