தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தில்லியில் மேலும் 18,286 பேருக்கு கரோனா பாதிப்பு; 28 போ் இறப்பு

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 18,286 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 9:54 pm

DIN

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 18,286 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 28 போ் இறந்தனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 30.64-இல் இருந்து 27.87 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் சனிக்கிழமை 20,718 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 30 இறப்புகள் பதிவாகின. தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக 28,867-ஆக வியாழக்கிழமை பதிவானது. அன்றைய தினம் 31 இறப்புகளும், 29.21 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

அரசின் தரவுகளின்படி, 2,591 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 123 போ் வென்டிலேட்டா் ஆதரவுடன் சிகிச்சையில் உள்ளனா். மொத்தமுள்ள 15,466 கரோனா படுக்கைகளில் 2,711 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.