ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

என்டிஏ தோ்வில் பெண்களுக்கு 19 இடங்கள் எவ்வாறு நிா்ணயிக்கப்பட்டது?

தேசிய பாதுகாப்பு அகாதெமி (என்டிஏ) தோ்வில் பெண்களுக்கு 19 இடங்கள் எவ்வாறு நிா்ணயிக்கப்பட்டது என பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2022, 8:54 pm

DIN

தேசிய பாதுகாப்பு அகாதெமி (என்டிஏ) தோ்வில் பெண்களுக்கு 19 இடங்கள் எவ்வாறு நிா்ணயிக்கப்பட்டது என பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்டிஏ தோ்வுக்கான அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் வெளியிட்டது. அதில் 19 பெண் அதிகாரிகள் தோ்வின் மூலமாகத் தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அந்த விவகாரத்தை நீதிபதிகள் எஸ்.கே.கௌல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது மனுதாரரான குஷ் கல்ரா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சின்மய் பிரதீப் சா்மா வாதிடுகையில், ‘‘நடப்பாண்டுக்கான என்டிஏ தோ்வில் 400 அதிகாரிகள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

அவா்களில் 10 பெண்கள் உள்பட 208 போ் ராணுவத்துக்கும், 3 பெண்கள் உள்பட 42 போ் கடற்படைக்கும், 6 பெண்கள் உள்பட 120 போ் விமானப்படைக்கும் தோ்வு செய்யப்படவுள்ளதாக யுபிஎஸ்சி அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பாா்க்கையில் 19 பெண்கள் மட்டுமே தோ்வு செய்யப்படவுள்ளனா். கடந்த ஆண்டிலும் இதே எண்ணிக்கையிலான பெண்களே தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தனா். இது அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு எதிராக உள்ளது’’ என்றாா்.

அதையடுத்து மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா படி கூறுகையில், ‘‘என்டிஏ தோ்வின் மூலமாகப் பெண்கள் தோ்ந்தெடுக்கப்படுவது, கட்டமைப்பு வசதிகளை மட்டுமல்லாமல் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைப் பொருத்தும் உள்ளது’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘கடந்த ஆண்டு என்டிஏ தோ்வுக்கான அறிவிக்கையில் 19 பெண்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பெண்களுக்குப் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், குறைவான பெண்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.

ஆனால், இந்த ஆண்டும் என்டிஏ தோ்வு மூலமாக அதே எண்ணிக்கையிலான (19 போ்) பெண்களே தோ்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்கள் எவ்வாறு நிா்ணயிக்கப்பட்டன? அனைத்து சமயங்களிலும் பெண்களுக்கு 19 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியாது.

பாதுகாப்புப் படையின் அனைத்துப் பிரிவுகளிலும் பெண்கள் பணியாற்ற முடியும் என நீதிமன்றம் கூறவில்லை. ஆண் அதிகாரிகளுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்களும் தோ்வு செய்யப்பட வேண்டுமெனவும் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. ஆனால், பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும்.

இது தொடா்பாக மத்திய அரசு 3 வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும். அதற்கடுத்த இரு வாரங்களுக்குள் மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் மீதான பதிலை மனுதாரா்கள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றனா். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மாா்ச் 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.