ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தில்லியில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

மேற்கு தில்லியின் ஹரி நகரில் உள்ள 4 மாடிக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் மீட்கப்பட்டதாகத் தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜனவரி 2022, 6:56 am

DIN

மேற்கு தில்லியின் ஹரி நகரில் உள்ள 4 மாடிக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் மீட்கப்பட்டதாகத் தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்புக்கு வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு சேவையின் இயக்குனர் அதுல் கார்க் கூறுகையில், 

நான்கு மாடிக் கட்டடத்தில் உள்ள மின் பலகைகள் தீ பிடித்து எரிந்ததால்,  அங்குள்ள அனைத்து தளங்களிலும் புகை பரவியது. 4 மாடிக் கட்டடத்திலிருந்த 22 பணியாளர்களை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.