
கரோனா பாதித்திருந்த போது மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளில் இருக்கும் விட்டமின் டி மற்றும் பல சத்துக்கள் நிறைந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டாம், அது நீண்ட கால உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
கரோனா சிகிச்சையின்போது பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் விவரங்களை மாற்றியமைத்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது ஐசிஎம்ஆர்.
இதையும் படிக்க.. நேரடியாகப் பருவத்தேர்வு: தமிழக கல்லூரிகள் பிடிவாதம்
ஸ்டீரியோ வகை மருந்துகளை அளவுக்கு அதிகமாக அளிக்கும் போது பூஞ்சை தொற்று போன்ற இரண்டாம் வகை பாதிப்புகள் உருவாகிறது என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை அளித்து வரும் டாக்டர் சௌரவ் மிட்டல் கூறுகையில், ஸ்டீரியோ வகை மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி எடுத்துக் கொள்வது உடல்நலத்துக்கு நல்லதல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவ பரிந்துரையின்படி ஸ்டீரியோ வகை மருந்துகள் கொடுக்கப்படும். அனைவருக்கும் அது பொருந்தாது என்கிறார்.
கரோனா சிகிச்சையில் ஸ்டீரியோ வகை மருந்துகள் பலனளிப்பதற்கு இதுவரை எந்த ஆதாரப்பூர்வமும் கிடைக்கவில்லை. கரோனா இரண்டு அலைகளின்போதும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு தற்போது நுரையீரல் பிரச்னை, நரம்பியல் பிரச்னை, இதய மற்றும் மனநலப் பிரச்னைகள் ஏற்படுவதைக் காண முடிகிறது என்கிறார்.
கரோனாவிலிருந்து மீண்ட பலருக்கும் மயக்கம், நெஞ்சு வலி, இதய படப்படப்பு, தலைச்சுற்றல், இதய பாதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, சிறுநீரக தொற்று போன்ற பாதிப்புகள் உருவாகின்றன என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
விட்டமின் டி மாத்திரையை அடிக்கடி எடுத்துக் கொள்வது குறித்து கேட்டதற்கு, டாக்டர் ஆனந்த் மோகன் அளித்த பதிலில், இவையெல்லாம் மிகச் சிறந்த மருந்துகளாக மக்கள் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இவை கரோனாவை கையாளும் சிகிச்சையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்யவில்லை என்று தெரிவிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.