காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி...படுதோல்வி அடையும் பாஜக...கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையேதான் போட்டி என்றும், சிரோமணி அகாலி தளம், அமரிந்தர் சிங் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணிக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் ஆளும் ஒரு சில மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று. வரும் தேர்தலில், இந்த மாநிலத்தை தக்க வைக்க அக்கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்ததாகக் கூறப்படும் அமரிந்தர் சிங்கை நீக்கிவிட்டு முதல்வர் பொறுப்பு சரண்ஜித் சன்னிக்கு வழங்கப்பட்டது. 

நாட்டிலேயே சதவிகிதத்தின் அடிப்படையில் அதிக தலித்கள் உள்ள மாநிலமாக பஞ்சாப் உள்ளதால், தலித் சமூகத்தை சேர்ந்த சன்னிக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு சவால்விடும் நிலையில் உள்ளது ஆம் ஆத்மி. கடந்த தேர்தலிலேயே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி, 20 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இந்த முறை, ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில், கடும் பரபரப்புரை மேற்கொண்டுவருகிறது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையேதான் போட்டி என்றும், சிரோமணி அகாலி தளம், அமரிந்தர் சிங் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணிக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதை பிரதிபலிக்கும் வகையிலேயே, கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், பல்வேறு செய்தி நிறுவனங்களும் இது தொடர்பான மக்கள் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஏபிபி - சி வோட்டர்ஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 37 முதல் 43 இடங்களை பிடிக்கும் என்றும், ஆம் ஆத்மி 52 முதல் 58 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகாலி தளம் 17 முதல் 23 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 1 முதல் தொகுதிகள் வரை வெல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிற செய்தி நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள்:

இந்தியா அஹெட் - இடிஜி: காங்கிரஸ்  40-44, ஆம் ஆத்மி  59-64, அகாலி தளம் 8-11, பாஜக 1-2

ரிபப்பிளிக் - பி மார்க்: காங்கிரஸ் 42-48, ஆம் ஆத்மி  50-56, அகாலி தளம் 13-17, பாஜக 1-3

நியூஸ் எக்ஸ் - போல்ஸ்ட்ராட்: காங்கிரஸ் 40-45, ஆம் ஆத்மி 47-52, அகாலி தளம் 22-26, பாஜக 1-2

டைம்ஸ் நவ் - வெட்டோ: காங்கிரஸ் 41-47, ஆம் ஆத்மி 54-58, அகாலி தளம் 11-15, பாஜக 1-3

இந்தியா நியூஸ் - ஜன் கி பாத்: காங்கிரஸ் 32-42, ஆம் ஆத்மி 58-65, அகாலி தளம் 15-18, பாஜக 1-2

இதில், இந்தியா அஹெட், டைம்ஸ் நவ், இந்தியா நியூஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஏபிபி, ரிப்பபிளிக், நியூஸ் எக்ஸ், ஜி செய்தி நிறுவனங்களின் கருத்துக்கணிப்பில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் இருப்பினும் ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com