சித்து
சித்து

பஞ்சாபில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் யார்? குழப்பும் சித்து

அமரிந்தர் முதல்வராக பொறுப்பு வகித்த போது, காங்கிரஸ் மாநில தலைவர் சித்து சொந்த கட்சியை எப்படி விமரிச்சிவந்தாரோ அதேபோல் தற்போதும் சாடிவருகிறார்.

 காங்கிரஸ் ஆளும் ஒரு சில மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று. வரும் தேர்தலில், இந்த மாநிலத்தை தக்க வைக்க அக்கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்ததாகக் கூறப்படும் அமரிந்தர் சிங்கை நீக்கிவிட்டு முதல்வர் பொறுப்பு சரண்ஜித் சன்னிக்கு வழங்கப்பட்டது. 

நாட்டிலேயே சதவிகிதத்தின் அடிப்படையில் அதிக தலித்கள் உள்ள மாநிலமாக பஞ்சாப் உள்ளதால், தலித் சமூகத்தை சேர்ந்த சன்னிக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செல்லும் என்றே பலரும் கருதினர்.

ஆனால், அமரிந்தர் முதல்வராக பொறுப்பு வகித்த போது, காங்கிரஸ் மாநில தலைவர் சித்து சொந்த கட்சியை எப்படி விமரிச்சிவந்தாரோ அதேபோல் தற்போதும் சாடிவருகிறார். பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் சொந்த கட்சியை விமர்சிப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செல்லும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறிகின்றனர்.

முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தற்போது காங்கிரஸ் கட்சியை நெருக்கடியில் தள்ளியுள்ளது. இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு நவ்ஜோத் சிங் சித்து அளித்த பேட்டியில், "காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். ஒரு தலைவரின் பண்புகளை ஆய்வு செய்த பிறகே காங்கிரஸ் முடிவெடுக்கும்.

கட்சித் தலைமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதில் கட்சித் தலைமை இறுதி முடிவெடுக்கும். அவர்கள் என்ன முடிவு எடுக்கலாம் அதை நான் ஏற்றுக்கொள்வேன். அதில் சந்தேகம் வேண்டாம். ஆம் ஆத்மி கட்சியைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அனுமதி பெறாமல் ஒரு செய்தியாளர் சந்திப்பு அல்லது ஒரு அறிக்கையைக் கூட சுயமாக வெளியிட முடியாது.

இதில் அவர் எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடிக்கும்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com