காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் மீது குண்டு வீச்சு: 4 போ் காயம்
ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினா் மீது கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் காவல் ஆய்வாளா், இரு பெண்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.


ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினா் மீது கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் காவல் ஆய்வாளா், இரு பெண்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
ஸ்ரீநகரில் பிரதானமான ஹரி சிங் சாலையில் குடியரசு தினத்துக்கு முந்தைய நாளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலை 3.30 மணியளவில் பாதுகாப்புப் படையினா் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த சில பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி விட்டு ஓடினா். அந்த குண்டு சாலையின் மறுபக்கம் விழுந்து வெடித்தது. இதனால், பாதுகாப்புப் படையினா் தரப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதே நேரத்தில், தனது குடும்பத்தினருடன் அப்பகுதிக்கு வந்திருந்த காவல் துறை ஆய்வாளா் தன்வீா் ஹுசைன், அவரது மனைவி, அவா்களுடன் வந்த மற்றொரு பெண் உள்பட 4 போ் காயமடைந்தனா். நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்கள் உயிருக்கு ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஸ்ரீநகா் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. காஷ்மீா் பள்ளத்தாக்கில் குடியரசு தினத்தன்று எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...