தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கேரளத்தில் புதிதாக 42 ஆயிரம் பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 42,154 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜனவரி 2022, 3:25 pm

DIN


கேரளத்தில் புதிதாக 42,154 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ளார். புதிதாக 42,154 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 42.40 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 38,458 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 10 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 54,395 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 3,57,552 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே, மாநிலத்தில் நிலவும் கரோனா சூழலை ஆய்வு செய்த உயர்நிலைக் குழு கடந்த இரண்டு ஞாயிறுகளாக அமலில் உள்ள முழு பொதுமுடக்கத்தை வரும் ஞாயிற்றுக்கிழமைக்கும் நீட்டிக்க இன்று முடிவெடுத்தது.

தடுப்பூசி:

இதுவரை 2.68 கோடி (100 சதவிகிதம்) பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் 84 சதவிகிதத்தினர் 2.25 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். 15 முதல் 18 வயதினர் 71 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.