எஸ்.ஐ. நியமனத்தில் முறைகேடு: கர்நாடக ஏடிஜிபி கைது
ஊழல் குற்றச்சாட்டில் கர்நாடக மாநிலத்தின் ஏடிஜிபி அம்ரித் பாலை சிஐடி காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.

ஏடிஜிபி அம்ரித் பால் (படம்/ டிவிட்டர்)

ஏடிஜிபி அம்ரித் பால் (படம்/ டிவிட்டர்)
ஊழல் குற்றச்சாட்டில் கர்நாடக மாநிலத்தின் ஏடிஜிபி அம்ரித் பாலை சிஐடி காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்தாண்டு காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், இந்த வழக்கை சிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிக்க | அந்தமானில் இன்று ஒரேநாளில் 6 முறை நிலநடுக்கம்!
இந்த விசாரணையில் ஏடிஜிபி அம்ரித் பாலுக்கு எதிராக ஆதாரம் சிக்கிய நிலையில் சிஐடி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா கூறுகையில், “எஸ்.ஐ. நியமன முறைகேட்டில் ஏடிஜிபி அம்ரித் பாலுக்கு எதிராக ஆவணங்கள் சிக்கியுள்ளன. முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் தப்ப முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...