சந்தோஷ் பங்கார்
சந்தோஷ் பங்கார்

நேற்றுவரை உத்தவ்; இன்று ஏக்நாத்: நம்பிக்கை வாக்கெடுப்பில் அணி மாறிய எம்.எல்.ஏ.

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் நேற்றுவரை இருந்த எம்.எல்.ஏ. சந்தோஷ் பங்கார், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் நேற்றுவரை இருந்த எம்.எல்.ஏ. சந்தோஷ் பங்கார், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர அரசியலில் பெரும் குழப்பத்திற்கு மத்தியில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்யப்பட்டதை தொடர்ந்து, பாஜகவுடன் இணைந்து சிவசேனை அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத், கடந்த வாரம் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க, 145 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 160  வாக்குகள் பெற்று ஏக்நாத் வெற்றி பெற்றார்.

இந்த வாக்கெடுப்பின் போது, நேற்றுவரை உத்தவ் தாக்கரேவின் அணியில் இருந்து வந்த சந்தோஷ் பங்கார், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் உத்தவ் அணியினர், சந்தோஷுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com