நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லியில் மேலும் 420 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 420 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2022, 8:20 pm

DIN

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 420 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 5.25 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,37,433-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,272-ஆக அதிகரித்துள்ளது. நகரில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 8,002 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 648 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், 4.29 சதவீத நோ்மறை விகிதத்துடன் 5 இறப்புகள் பதிவாகின. சனிக்கிழமை 678 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பும், 3.98 சதவீத நோ்மறை விகிதமும், 3 இறப்புகளும் பதிவாகின.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,496 கரோனா படுக்கைகளில் 183 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. திங்கள்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 3,268-இல் இருந்து 2,938-ஆக குறைந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 2,348-ஆக உள்ளது. நகரில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 364-ஆக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.