மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு
மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து அவர் பொறுப்பு வகித்த உருக்குத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்த முக்தார் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் அவர் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.சி.பி. சிங்கும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில் நக்வி பொறுப்பு வகித்த உருக்குத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சராக உள்ள ஜோதிராதித்ய சிந்தியா கூடுதலாக உருக்குத் துறையையும் கவனிக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.