ஒரு இஸ்லாமிய எம்பி கூட இல்லாத பாஜக: முடிவுக்கு வருகிறதா இஸ்லாமியர்கள் பிரதிநிதித்துவம்?

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி விலகிய நிலையில் இஸ்லாமியர்கள் இல்லாத மத்திய அமைச்சரவை உருவாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி விலகிய நிலையில் இஸ்லாமியர்கள் இல்லாத மத்திய அமைச்சரவை உருவாகியுள்ளது.

வியாழக்கிழமையுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் நாளையுடன் நிறைவடைகிறது. இதன்மூலம் பாஜகவில் உள்ள 3 இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவுக்கு வந்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பிலும் பாஜக சார்பில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லாத நிலையில் இஸ்லாமியர்கள் இல்லாத எம்பிக்கள் கொண்ட கட்சியாக பாஜக மாறியுள்ளது.

பாஜக அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்கள் எம்.ஜே.அக்பர் மற்றும் சையத் ஜாபர் இஸ்லாம் ஆகியோரின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்துள்ளது. 

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என எதிர்க்கட்சியினர் விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில் பாஜக சிறுபான்மை மோர்சா தலைவர் ஜமால் சித்திக் பாஜக அரசியல் மதத்துடன் தொடர்புடையது அல்ல எனவும், எந்த மதத்திலிருந்தும் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவே தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் அனைத்து சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதை பாஜக உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். பாஜகவிற்கு மக்களவையில் 301 உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com