
இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள மணிகரன் என்ற இடத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பினால் திடீர் வெள்ளத்தில் 4 பேர் மாயமாகியுள்ளனர்.
குலு மாவட்டத்தின் சலால் பஞ்சாயத்தில் உள்ள சோஜ் கிராமத்தில் காலை 6 மணியளவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு நான்கு முதல் ஆறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார்.
குலு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சர்மா கூறுகையில்,
முதல்கட்ட தகவலின்படி நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.
மீட்புக் குழு அனுப்பப்பட்டாலும், நிலச்சரிவு காரணமாக நடுவழியில் சிக்கிக் கொண்டதாக மோக்தா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.