
பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதீய ஜன சங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது முழு உருவ படத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பாரதீய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 121வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பாஜகவின் முன்னோடி அமைப்பாக பாரதீய ஜன சங்கம் விளங்கியது. இந்த சங்கம் 1957ஆம் ஆண்டு ஹிந்து மகா சபையிலிருந்து பிரிந்து வந்தது.
இந்த சங்கத்தை தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜி, நேரு ஆட்சியின்போது அமைச்சர் பதவி வகித்தவர். பின்னர் நேரு அமைச்சரவையிலிருந்து பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், சியாமா பிரசாத் முகர்ஜியின் 121வது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அவர்து முழு உருவப் படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மலர் துவி மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.