குஜராத்தில் இன்று இயற்கை வேளாண்மை மாநாடு: பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்
குஜராத் மாநிலம், சூரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் உரையாற்றுகிறாா்.


குஜராத் மாநிலம், சூரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் உரையாற்றுகிறாா்.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
குஜராத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற குஜராத் பஞ்சாயத்து சம்மேளன நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசும்போது, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, சூரத் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் போன்ற பல்வேறு தரப்பினா் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்பயனாக, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு, இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இவ்வாறு, சூரத் மாவட்டம் முழுவதும் 41,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சூரத் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமா் மோடி காலை 11:30 மணிக்கு காணொலி மூலம் உரையாற்றுகிறாா். அதில், இயற்கை வேளாண்மை முறைக்கு மாறி வெற்றி அடைந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கிறாா்கள். இந்த மாநாட்டில் மாநில ஆளுநா், முதல்வா் ஆகியோா் கலந்துகொள்கிறாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...