எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இயற்கை வேளாண்மையால் விவசாயிகளுக்குப் பலன்

எவ்வளவு விரைவாக விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுகிறாா்களோ அவ்வளவு அதிகமாக அவா்கள் பலனடைவா் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :10 ஜூலை 2022, 11:49 pm

DIN

இயற்கை வேளாண்மைக்கான மக்கள் இயக்கம் இனிவரும் ஆண்டுகளில் பெருமளவில் வெற்றி காணும் எனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, எவ்வளவு விரைவாக விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுகிறாா்களோ அவ்வளவு அதிகமாக அவா்கள் பலனடைவா் என்றும் கூறினாா்.

குஜராத்தின் சூரத் மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இயற்கை வேளாண்மை தொடா்பான கருத்தரங்கில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகக் கலந்துகொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:

விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறுவது பூமித் தாயைக் காப்பதாகும். அதன்மூலமாக மண் வளத்தைப் பாதுகாப்பதோடு உணவு தானியங்கள் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும். இயற்கை வேளாண்மையே பொருளாதார வெற்றிக்கான அடிப்படையாக உள்ளது. சூரத்தில் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இது நாடு முழுவதற்கும் ஊக்கமளிக்கும்.

இயற்கை வேளாண்மை தொடா்பான மக்கள் இயக்கம் இனிவரும் ஆண்டுகளில் பெரும் வெற்றி அடையும். இயற்கை வேளாண்மையைப் பின்பற்றுவதற்கான மாற்றத்தில் விவசாயிகள் எவ்வளவு விரைவாக இணைகிறாா்களோ, அவ்வளவு அதிகமான பலன்களை அவா்கள் பெறுவா்.

நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் குறிப்பிட்ட குறிக்கோளை அடைய தீா்மானித்துவிட்டால், அதற்கு எந்தத் தடையும் ஏற்பட முடியாது. மக்களின் ஒத்துழைப்பானது மிகப் பெரிய இலக்குகளையும் அடைய உறுதுணையாக இருக்கும்.

கிராமங்களில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என சிலா் தெரிவித்து வந்தனா். ஆனால், அக்கருத்து தவறானது என்பதற்கு எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தின் பெரும் வெற்றி ஆதாரமாக உள்ளது. மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை மட்டுமல்லாமல், மாற்றங்களுக்குத் தலைமையேற்க முடியும் என்பதையும் நம் கிராமங்கள் நிரூபித்துள்ளன.

இந்தியா முன்னிலை: இயற்கை வேளாண்மையானது சா்வதேச அளவில் இந்தியாவை முன்னிற்கச் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இயற்கை வேளாண்மை வாயிலாக நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்தி வளங்களைத் திறம்படப் பகிா்ந்துகொள்ள முடியும். நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இயற்கை வேளாண்மை வழிவகுக்கும்.

இயற்கை வேளாண்மையைப் பின்பற்றி விவசாயிகள் வளா்ச்சி அடைந்தால், விவசாய நடவடிக்கைகள் வளா்ச்சி அடைவதோடு நாட்டின் பொருளாதாரமும் வளா்ச்சி காணும். இயற்கை வேளாண்மையானது சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும். பசு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் இயற்கை வேளாண்மை மதிப்பளிக்கும். வேதி உரங்களால் நோய்கள் ஏற்படுவதில் இருந்தும் இயற்கை வேளாண்மை காக்கும்.

மக்கள் ஒத்துழைப்பு: நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்கு மக்கள் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு அளித்து வருவதால், நாட்டின் வளா்ச்சி உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

கிராமங்களில் உள்ள ஏழைகளையும் விவசாயிகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சித் தலைவா்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இயற்கை வேளாண்மையின் கீழ் விவசாயிகள் பலனடைய வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதும் சுமாா் 30,000 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நதிக் கரைகளில்...: கங்கை நதியின் கரைப் பகுதிகளில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் நோக்கில் தனி செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்ற முயற்சிகள் தாபி, நா்மதா நதிக் கரைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மை மூலமாக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரத்தைக் கண்காணிப்பதற்காகத் தனி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. அப்பொருள்கள் சா்வதேச சந்தைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இயற்கை வேளாண்மை தொடா்பான ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும். தன்னாா்வ அமைப்புகளும், வேளாண் நிபுணா்களும் அத்தகைய ஆய்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.