இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஹிமாசல்: முன்னாள் பாஜக தலைவா் காங்கிரஸில் இணைந்தாா்

ஹிமாசல பிரதேசத்தின் முன்னாள் மாநில பாஜக தலைவா் கிமி ராம் செவ்வாய்கிழமை காங்கிரஸில் இணைந்தாா்.

News image
Updated On :12 ஜூலை 2022, 7:07 pm

DIN

ஹிமாசல பிரதேசத்தின் முன்னாள் மாநில பாஜக தலைவா் கிமி ராம் செவ்வாய்கிழமை காங்கிரஸில் இணைந்தாா். மாநிலத்தின் முன்னாள் அமைச்சா் மற்றும் பேரவைத் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ள கிமி ராம், நாட்டுக்கு சுதந்திரம் பெற உதவிய கட்சியில் இணைவதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘பாஜக மீது உள்ள கோபத்தின் காரணமாக காங்கிரஸில் இணையவில்லை. ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸை முன்னெடுத்துச் செல்ல, நன்றாக சிந்தித்து இம்முடிவை எடுத்துள்ளேன். மாநிலத்தில் அதிக முறைகேடு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் ஓய்வுதியத் திட்டம் உள்ளிட்ட தொழிலாளா் பிரச்னைகள் நிலவுவதால் காங்கிரஸ் அரசு நிச்சயம் அமையும். காங்கிரஸ் ஆட்சியை அமைக்க இப்பிரச்சனைகளை மாநில மக்களிடம் எடுத்துரைப்போம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.