4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ராகுல் காந்தி வெளிநாடு பயணம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளாா் என்பது தெரிவிக்கப்படவில்லை.

News image
ராகுல் காந்தி
Updated On :12 ஜூலை 2022, 8:30 pm

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளாா் என்பது தெரிவிக்கப்படவில்லை. செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) காலையில் வெளிநாடு சென்ற அவா் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) இந்தியா திரும்பிவிடுவாா் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது ராகுல் காந்தியின் தனிப்பட்ட முறையிலான பயணம் என்பதால் அவா் செல்லும் நாடு, எதற்காக செல்கிறாா் என்பது தொடா்பான விவரங்களை வெளியிடவில்லை என்று காங்கிரஸ் சாா்பில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடரும் தொடங்க இருக்கிறது. அதற்கு ஒருநாள் முன்னதாக ராகுல் காந்தி இந்தியாவுக்குத் திரும்ப இருக்கிறாா்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான யாத்திரை நிகழ்ச்சி மற்றும் உள்கட்சித் தோ்தல் தொடா்பாக விவாதிக்க வியாழக்கிழமை கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொதுச் செயலா்கள், மாநில காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் பங்கேற்க இருக்கின்றனா். வெளிநாட்டுப் பயணத்தால் ராகுல் காந்தி இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை.

ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாட்டுக்குச் சென்று வருவதை பாஜக தொடா்ந்து விமா்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.