திருப்பதி பிரம்மோற்சம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
திருப்பதி (கோப்புப் படம்)
திருப்பதி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படுவதாக திருப்பதி - திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

ஆண்டுதோறும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள்  அனுமதியின்றி பிரம்மோற்சவம் நடைபெற்றது. 

வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாட்கள் நடத்தப்பட உள்ளது.  அக்டோபர் 1ஆம் தேதி கருட சேவை நடைபெறும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com