விமானத்தில் குழந்தையுடன் வந்த தம்பதியை சோதித்த அதிகாரிகள்: பைகளில் இருந்தது??

புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், இரண்டு பயணிகளிடமிருந்து 45 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரும் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் குழந்தையுடன் வந்த தம்பதியை சோதித்த அதிகாரிகள்: பைகளில் இருந்தது??
தில்லியில் குழந்தையுடன் வந்த தம்பதியை சோதித்த அதிகாரிகள்: பைகளில் இருந்தது??
Updated on
1 min read


புது தில்லி: புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், இரண்டு பயணிகளிடமிருந்து 45 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரும் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியத்நாமிலிருந்து தங்களது பெண் குழந்தையுடன் ஜூலை 11ஆம் தேதி புது தில்லி வந்த ஜக்ஜித் சிங் மற்றும் அவரது மனைவி ஜஸ்விந்தர் கௌர் ஆகியோரிடமிருந்து கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜக்ஜித் சிங், இரண்டு டிராலி பைகளை வைத்திருந்தார். அவை, அதே நாளில், அதே நேரத்தில் பாரிஸிலிருந்து வந்த அவரது மூத்த சகோதரர் மஞ்ஜித் சிங், வியத்நாமிலிருந்து வந்த ஜக்ஜித் சிங்கிடம் கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், ஜஸ்விந்தர் கௌருக்கும் தொடர்பிருப்பதாகவும் அவரும், அந்த டிராலி பைகளில் இருந்த டேக்குகளை, லேபிள்களை அகற்றி, அவை தற்போது விமானத்திலிருந்து வந்ததற்கான தடயங்களை மறைக்க உதவியிருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அந்த துப்பாக்கிகள் உண்மையானவையா என்பதை பரிசோதனை மூலம் உறுதி படுத்த வேண்டியிருக்கும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் அவை இயங்கும் திறன் கொண்ட துப்பாக்கிகள்தான் பயன்படுத்த உகந்த நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com