ஓப்போ நிறுவனம் ரூ.4,390 கோடி வரி ஏய்ப்பு

ஓப்போ இந்தியா  நிறுவனம்  ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஓப்போ நிறுவனம்
ஓப்போ நிறுவனம்

ஓப்போ இந்தியா  நிறுவனம்  ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ உலக அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும், விற்பனையிலும் முன்னணியில் உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இதன் வளர்ச்சி சமீப காலமாக உயர்ந்து வருகிறது.

சில நாள்களுக்கு முன்பு வெளிநாடுகளிலிருந்து மின்னணு சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை ஒப்போ இந்தியா நிறுவனம் இறக்குமதி செய்ததில் சுங்கவரியை ஒழுங்காக செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு  வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்நிறுவனத்திலும் அங்கு பணியாற்றும்  முக்கிய பொறுப்பாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

மேலும், ஊழியர்களிடமும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் விசாரணை நடத்தியதில்  போலி ஆவணங்களைச் சமர்பித்து முறையாக செலுத்த வேண்டிய வரியைக் குறைத்துக் கட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்று ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடியை வரி ஏய்ப்பு செய்தது உறுதியாகியுள்ளது என வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com