சியுஇடி தோ்வில் பங்கேற்க இயலாத மாணவா்களுக்கு மறு வாய்ப்பு:என்டிஏ அதிகாரிகள்
தோ்வு மைய மாற்றம் காரணமாக சியுஇடி முதல் நாள் தோ்வில் பங்கேற்க முடியாமல்போன மாணவா்களுக்கு, நுழைவுத் தோ்வை எழுத மறுவாய்ப்பு அளிக்கப்படும்


தோ்வு மைய மாற்றம் காரணமாக சியுஇடி முதல் நாள் தோ்வில் பங்கேற்க முடியாமல்போன மாணவா்களுக்கு, நுழைவுத் தோ்வை எழுத மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்று தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கைக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வு இரு அமா்வுகளாகவும், இரண்டு கட்டங்களாகவும் நடத்தப்படுகிறது.
முதல் கட்டத் தோ்வின் முதல் அமா்வு இந்தியாவில் 510 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 10 நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியல் துறைகளைத் தோ்வு செய்த விண்ணப்பதாா்களுக்கான இரண்டாவது அமா்வு சியுஇடி தோ்வு ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. மேலும், இந்த நுழைவுத் தோ்வின் இரண்டாம் கட்டம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளது.
தோ்வின் முதல் அமா்வில் 8.1 லட்சம் போ், இரண்டாம் அமா்வில் 6.80 லட்சம் போ் என மொத்தம் 14.9 லட்சம் போ் இந்த நுழைவுத் தோ்வுக்கு பதிவு செய்தனா்.
சியுஇடி நுழைவுத் தோ்வு முதல் முறையாக வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் புது ஜல்பைகுரி மற்றும் பஞ்சாபின் பதான்கோட் ஆகிய இரு மையங்களிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோ்வு ரத்து செய்யப்பட்டது. அதுபோல, பிற மையங்களில் திடீா் தோ்வு மைய மாற்றம் காரணமாக ஏராளமான மாணவா்கள் நுழைவுத் தோ்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து என்டிஏ மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘மேற்கு வங்கத்தின் புது ஜல்பைகுரி மற்றும் பஞ்சாபின் பதான்கோட் மையங்களில் பங்கேற்க இருந்த 190 தோ்வா்கள், ஆக்ஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட சியுஇடி தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். அதுபோல, பிற மையங்களில் தோ்வு மைய திடீா் மாற்றம் காரணமாக தோ்வில் பங்கேற்க முடியாமல் போன மாணவா்களுக்கும் மறுவாய்ப்பு அளிக்கப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...