புது தில்லி: ஆயுதப் படையில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 819 பாதுகாப்புப் படை வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் தரைப்படையில் 642 பேரும், கடற்படையில் 29 பேரும், விமானப்படையில் 148 பேரும் தற்கொலை செய்துள்ளனர் என்று பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் படை வீரர்களின் தற்கொலைகள் பற்றிய தரவுகளை அரசு பராமரிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாம்| இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி
பணிகளில் ஏற்படும் மனஅழுத்தமே தற்கொலைக்குக் காரணமாக உள்ளது. எனவே, மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றோம்.
மேலும், அதிக மன அழுத்தத்திற்கு ஆளான பணியாளர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.