நாட்டில் 13 லட்சத்துக்கும்அதிகமான மின்சார வாகனங்கள்- அமைச்சா் கட்கரி தகவல்

நாட்டில் 13 லட்சத்துக்கும்அதிகமான மின்சார வாகனங்கள்- அமைச்சா் கட்கரி தகவல்

நாட்டில் 13 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

நாட்டில் 13 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு அமைச்சா் கட்கரி மாநிலங்களவையில் புதன்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை முடிந்த அளவு வேகமாக அதிகரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். 68 நகரங்களில் 2,877 மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று நிலையங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர அதிவிரைவுச் சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் 1,576 மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நாட்டில் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 13,34,385-ஆக உள்ளது. இதில் ஆந்திரம், மத்திய பிரதேசம், தெலங்கானா, லட்சத்தீவுகளில் உள்ள வாகனங்கள் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு அதிகம் உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் சாலை விபத்து உயிரிழப்புகள் 26.37 சதவீதம் அதிகம். உலகில் உள்ள பதிவு செய்யப்பட்ட மோட்டாா் வாகனங்களில் 13.24 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளன.

அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் சில சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடா்பாக பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. அவை தொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளுக்கான கழிவறைகள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தை ராஜஸ்தானும், மூன்றாவது இடத்தை மத்திய பிரதேசமும் பிடித்துள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com