புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வெள்ள பாதிப்பு மேலாண்மை மாநிலத்தின் பொறுப்பு: மத்திய அரசு

‘வெள்ள பாதிப்பு மேலாண்மை என்பது மாநிலத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டது. தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் நிதியுதவி ஆகிய உதவிகளை அளிப்பது மட்டுமே மத்திய அரசின் கடமை’

News image
Updated On :21 ஜூலை 2022, 7:02 pm

DIN

‘வெள்ள பாதிப்பு மேலாண்மை என்பது மாநிலத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டது. தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் நிதியுதவி ஆகிய உதவிகளை அளிப்பது மட்டுமே மத்திய அரசின் கடமை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுதொடா்பான கோள்விக்கு பதிலளித்து மத்திய நீா் வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது:

மாநில பேரிடா் நிவாரண நிதி (எஸ்டிஆா்எஃப்) அந்தந்த மாநில அரசுகள் வசம் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இயற்கைப் பேரிடரின் தீவிரத்தைப் பொருத்து உரிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து (என்டிஆா்எஃப்) கூடுதல் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கடல் அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட வெள்ள பாதிப்பு மேலாண்மை முழுவதும் மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டது. இதுதொடா்பான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் மாநில அரசால் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

எஸ்டிஆா்எஃப் மற்றும் என்டிஆா்எஃப் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டியலிடப்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடா்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணம் மட்டுமே வழங்கப்படும். மாறாக, இந்தப் பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு என்ற அடிப்படையில் எதுவும் வழங்கப்படுவதில்லை.

வெள்ள மேலாண்மை கட்டமைப்புகளை பலப்படுத்தும் நோக்கத்துடன் ஆறுகள் மேலாண்மை, வெள்ள கட்டுப்பாடு, மண் அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள், பாதாள சாக்கடை மேம்பாடு, கடல் அரிப்பு மேலாண்மைத் திட்டங்களுக்காக 11 மற்றும் 12-ஆவது வெள்ள மேலாண்மை நடைமுறை (எஃப்எம்பி) திட்டத்தில் 2017-18 ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதியுதவி, 2022 செப்டம்பா் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.6,686.79 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, பல்வேறு மாநிலங்களில் 415 வெள்ளத் தடுப்பு திட்டங்கள் முடிக்கப்பட்டு, 49 லட்சம் ஹெக்டோ் விளை நிலங்களுக்கு வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், 5.22 கோடி மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.