கொண்டாட்டங்களுக்குத் தயாராகும் முர்முவின் சொந்த ஊர் எப்படி இருக்கிறது? 

ஒடிசா மாநிலம் ரெய்ரங்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான லட்டுக்கள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
கொண்டாட்டங்களுக்குத் தயாராகும் முர்முவின் சொந்த ஊர் எப்படி இருக்கிறது? 
கொண்டாட்டங்களுக்குத் தயாராகும் முர்முவின் சொந்த ஊர் எப்படி இருக்கிறது? 
Published on
Updated on
2 min read


ரெய்ரங்பூர்: ஒடிசா மாநிலம் ரெய்ரங்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான லட்டுக்கள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆங்காங்கே ஒடிசாவின் மகள் என்று முர்முவின் புகைப்படத்துடன் கூடிய பேனர்கள் என ஊரே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படுகிறது. எனினும், தங்கள் ஊர் மகள் திரௌபதி முர்மு நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையோடு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது அவரது சொந்த ஊரான ரெய்ரங்பூர்.

அங்கிருக்கும் வணிக அமைப்புகள், மத அமைப்புகள், கல்வி நிலையங்கள் என அனைத்தும், தங்கள் மண்ணின் மகள் வெற்றி பெற்றுவிட்டார் என்ற செய்தியைக் கேட்க ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அனைவருக்கும் வழங்கி மகிழ ஆயிரக்கணக்கான லட்டுகள் தயாராகி வருகிறது. நடன கலைஞர்களும் நடன ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து உள்ளூர் பாஜக தலைவர் தபன் மகந்தா கூறுகையில், 20 ஆயிரம் லட்டுகள் தயாரித்து வைத்திருக்கிறோம். முர்முவை வாழ்த்தும் 100 பேனர்கள் ஊர் முழுக்க வைக்கப்படும் என்று கூறுகிறார்.

பல இடங்களில் பொதுமக்களுக்கு விருந்துகளும் தயாராகி வருகிறது.

வாக்கு எண்ணிக்கை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது. இந்தத் தோ்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனா். திரெளபதி முா்மு வெற்றி பெறும்பட்சத்தில், நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவியை அடையும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை அவா் பெறுவாா். அவருக்கே வெற்றி வாய்ப்பும் அதிகம் உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று மாலையிலேயே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தற்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-இல் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவா் ஜூலை 25-இல் பதவியேற்கிறாா்.

முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன் நிலவரத்தை தோ்தல் அலுவலா் பி.சி.மோடி அறிவிப்பாா். பின்னா், அகரவரிசைப்படி முதல் 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவையும் அவா் அறிவிப்பாா். அதன்பின்னா், அடுத்த 20 மாநிலங்களின் நிலவரம் அறிவிக்கப்பட்டு இறுதியாக தோ்தல் முடிவு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்தத் தோ்தலில் 99 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகின.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com