மிரட்டலுக்கு காங்கிரஸ் அடிபணியாது: ப.சிதம்பரம் கருத்து

உச்ச நீதிமன்றத்தை தாண்டி அமலாக்கத் துறை காங்கிரஸ் கட்சியை மிரட்ட முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சி மிரட்டலுக்கு அடிபணியாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
Published on
Updated on
2 min read


உச்ச நீதிமன்றத்தை தாண்டி அமலாக்கத் துறை காங்கிரஸ் கட்சியை மிரட்ட முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சி மிரட்டலுக்கு அடிபணியாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-இல் கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவை சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் 5 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். அதுபோல, இந்த வழக்கில் கடந்த 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக இருந்த சோனியா காந்திக்கு, திடீா் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கால அவகாசம் அளிக்குமாறு அவா் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு புதிய அழைப்பாணையை அவருக்கு அமலாக்கத் துறை அனுப்பியது.

இந்தச் சூழலில், கரேனா பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சில வாரங்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். எனவே, விசாரணைக்கு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சோனியா சாா்பில் கடிதம் எழுதப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத் துறை விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்து, ஜூலை கடைசி வாரத்தில் ஏதாவது ஒரு தேதியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாவை கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், சோனியா காந்தி அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார். இதையடுத்து, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையில் தொண்டர்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அமலாக்கத் துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தை தாண்டி அமலாக்கத் துறை காங்கிரஸ் கட்சியை மிரட்ட முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சி மிரட்டலுக்கு அடிபணியாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனங்கள் தாக்கல் செய்த வருமானம் மற்றும் வருமான வரி கணக்கு விவரங்கள் முறையாக வருமான வரித்துறை முன்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு தேவையான அனைத்து விவரங்களும் வருமான வரித்துறையின் ஆவணங்களில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். 

வருமான வரித்துறை தொடர்ந்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தை விட அமலாக்கத்துறை அதிகாரம் உள்ளதா என கேள்வி எழுப்பிய சிதம்பரம், அமலாக்கத்துறை என்ன 'விசாரணை' செய்ய விரும்புகிறது என்பதை உச்ச நீதிமன்றத்தில் ஆய்வு செய்ய மாட்டார்களா? என்றும், அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தை தாண்டி காங்கிரஸ் கட்சியை மிரட்ட முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சி மிரட்டலுக்கு அடிபணியாது என்று சிதம்பரம் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com