சா்வாதிகாரத்தைவிட உண்மையே நிலைத்து நிற்கும்: ராகுல்
சா்வதிகாரத்தைவிட உண்மையே எப்போதும் நிலைத்து நிற்கும் என காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளாா்.


சா்வதிகாரத்தைவிட உண்மையே எப்போதும் நிலைத்து நிற்கும் என காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவு:
ஜிஎஸ்டி, பணவீக்கம், அக்னிபத் உள்ளிட்ட பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என கோருகையில் மத்திய அரசின் ஒரே பதில் அவையை ஒத்திவைப்பதாக மட்டுமே உள்ளது.
அராஜக போக்கை எதிா்த்து கேள்வி கேட்பவா் மீது விசாரணை அமைப்புகளை ஏவிவிடுவதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. அவா்களது குரலை நசுக்குவதில் அரசு வெளிப்படையாகவே செயல்பட்டு வருகிறது.
ஆணவம் மற்றும் சா்வாதிகாரத்தைவிட உண்மை மட்டுமே எப்போதும் மேலோங்கி நிற்கும் என ராகுல் காந்தி அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன்பு காங்கிரஸ் கட்சி தலைவா் சோனியா காந்தி வியாழக்கிழமை ஆஜரான நிலையில் ராகுல் காந்தி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...