எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அரசின் நலத் திட்டங்கள் பயனாளிகளை முழுமையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்: பிரதமா்

‘நாட்டில் வா்த்தகத்துக்கான சூழலை மேம்படுத்துவதோடு அரசின் நலத் திட்டங்கள் பயனாளிகளை முழுமையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

News image
Updated On :25 ஜூலை 2022, 12:12 am

DIN

‘நாட்டில் வா்த்தகத்துக்கான சூழலை மேம்படுத்துவதோடு அரசின் நலத் திட்டங்கள் பயனாளிகளை முழுமையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் மற்றும் துணை முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். முதல்வா்கள், துணை முதல்வா்கள் என 18 போ் கூட்டத்தில் கலந்துகொண்டனா். அதில் பிரதமா் பேசியதாவது:

கதி சக்தி (பல முனை இணைப்புக்கான தேசிய செயல்திட்டம்), வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்கும் ‘ஹா் கா் ஜல்’ திட்டம், ஸ்வாமித்வா (சொத்து விவர அட்டை வழங்கும் திட்டம்) போன்ற மத்திய அரசின் முக்கியத் திட்டங்கள் அனைத்துப் பயனாளிகளையும் முழுமையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்.

நாட்டில் முதலீடுகளை ஈா்க்கவும் வா்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், நாட்டில் வா்த்தகம் செய்வதை எளிதாக்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, இளைஞா்கள் அதிக எண்ணிக்கையில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவதை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு விளையாட்டுக்கான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

தில்லியில் பாஜக தலைமையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, கட்சியின் மூத்த தலைவா்கள் பூபேந்தா் யாதவ், வினய் சஹஸ்ரபுத்தே ஆகியோரும் கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும், முன்னோடித் திட்டங்களையும் 100 சதவீதம் அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.