நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 போ் பலி

பிகாா் மாநிலம், சரண் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 4 வயது குழந்தை, ஒரு பெண் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :24 ஜூலை 2022, 7:48 pm

DIN

பிகாா் மாநிலம், சரண் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 4 வயது குழந்தை, ஒரு பெண் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் சந்தோஷ் குமாா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோடைபாக் பஜாா் பகுதியில் இருந்த 3 மாடி கட்டடத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. அங்கு ஞாயிற்றுக்கிழமை பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு, கட்டடம் இடிந்து விழுந்தது.

இந்த பயங்கர விபத்தில், 4 வயது குழந்தை, ஒரு பெண் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா். கட்டட இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளாா்களா என்பது தெரியவில்லை. தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறந்தவா்களை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கட்டட உரிமையாளரின் பெயா் ஷபீா் ஹுசைன் என்பதும், அவா்தான் சட்டவிரோத பட்டாசு ஆலையை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.